இந்தியா, மார்ச் 28 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 28 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் பார்வதி மீனாவிடம் விஜயா உன்னை எவ்வளவு மட்டம் தட்டி பேசி இருக்கிறார். அதுக்காக தான் இப்போ கடவுள் தண்டனை கொடுத்து இருக்காரு என்று சொல்ல, அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லை அத்தையை வீட்டுக்கு வர சொல்லுங்க என்று சொல்லுகிறார். நானும் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் சரி நான் பேசி பார்க்கிறேன் என போனை வைக்கிறார் பார்வதி.

பின்னர் மீனா உங்க அண்ணா ரோகிணிய பார்த்து பேசி இருப்பாரா என்று கேட்க அவனே பீஸ் போன பல்பு மாதிரி இருக்கா எது சொன்னாலும் அமைதியாகவே இருக்கான். அம்மா சொல்லாம வேற எதுவும் செய்ய மாட்டான் என்று சொல்கிறார் முத்து. இதுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் ஒரு ஆள் இருக்காங்க என்று முத்து சொல்ல யார் ...