இந்தியா, மார்ச் 27 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 27 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோட் தொடர்ச்சியாக இன்று அண்ணாமலை மனோஜிடம் ரோகிணியை அழைத்து வரச் சொல்லி பேசுகிறார். ஆனால் மனோஜ் அம்மா சொல்லாமல் நான் ரோகிணியை அழைத்து வர மாட்டேன் என உறுதியாக சொல்கிறார். மேலும் என் விஷயத்தில் இனி நீங்கள் தலையிட வேண்டாம் என அண்ணாமலையிடம் மனோஜ் சொல்கிறார்.

பிறகு மனோஜ் ரூமுக்குள் சென்று கதவை சாத்துகிறார். இதனால் அண்ணாமலை வருத்தத்தில் நிற்க அப்போது முத்து அப்பா கவலைப்பட வேண்டாம் இவனை பற்றி தான் உங்களுக்கு தெரியும் இல்லை. அம்மா பேச்சை தவிர வேறு யார் சொன்னாலும் கேட்க மாட்டான். எல்லாப் பிரச்சனையும் சரியாகிவிடும் இதை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என சொல்கிறார். அண்ணாமலை எதுவும் பேசாமல் மௌனமாக செல்கிறார். ...