இந்தியா, மார்ச் 21 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோடு தொடர்ச்சியாக இன்றும் பரசுராமன் கல்யாணத்தில் மும்மரமாக முத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது மாப்பிள்ளையின் நண்பர்கள் இருவர் குடிப்பதற்காக சரக்கு எடுத்துச் சொல்கிறார்கள். அப்போது முத்துவை எதிர்ச்சியாக இடிக்க முத்து கையில் அந்த பாட்டில் இருக்கிறது.

இதை பார்த்த மனோஜ் விஜயவிடம் சென்று சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும் இல்லை என்றால் அவமானம் தான் மிஞ்சும் என சொல்கிறார். என்ன ஆனது என விஜயா கேட்க முத்து இங்கேயும் குடிக்க ஆரம்பித்து விட்டான். அவன் கையில் பாட்டில் வைத்திருக்கிறான் என சொல்ல இதனை விஜயா அண்ணாமலையிடம் சொல்கிறார். அண்ணாமலை அவன் அப்படி செய்ய மாட்டான் என சொல்ல இல்லை மனோஜ் அவன் கையில் பாட்டில் இரு...