இந்தியா, மார்ச் 19 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 19 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோட் தொடர்ச்சியாக மனோஜ் 30 லட்சத்தை கண்டுபிடிக்க சாமியாரிடம் குறி கேட்கிறார். ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் இதனை நக்கல் செய்ய சாமியார் கோபத்தோடு வெளியே செல்கிறார். மனோஜ் கொடுத்த 3 ஆயிரத்தையும் எடுத்து செல்கிறார். அதற்கு பார்வதி இடம் அவர்தான் குறி சொல்லவே இல்லையே என் பணத்தை எதற்கு எடுத்து செல்கிறார் என கேட்கிறார்.

பின்னர் முத்துவும் மீனாவும் தனியாக பேசிக் பேசுகிறார்கள். அப்போது இனி மனோஜை நம்பி பிரயோஜனம் இல்லை நாம் தான் இதை கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறார்கள். மேலும் மீனா மாமா இதில் நம்மை தலையிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என சொல்ல நமக்கு கஷ்டம் எதற்கு என தான் அவர் சொன்னார். இவனை நம்பினால் இந்த மாத...