இந்தியா, மார்ச் 15 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 15 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோடு தொடர்ச்சியாக இன்று வசமாக சிக்கிய சிந்தாமணியும், மேனேஜரும் மண்டபம் ஓனரை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள். பின்னர் மண்டபம் ஓனர் இருவரையும் திட்டி விட்டு பணத்தை மீட்டு மீனாவிடம் கொடுக்கிறார்.

உன்னுடைய நேர்மைக்கு நீ கண்டிப்பாக முன்னேறுவாய் இதேபோல் நிறைய ஆர்டர் எடு, இனிமேல் என் மண்டபத்தில் வரும் ஆர்டர்கள் எல்லாமே உன்னுக்குத்தான் என கூற மகிழ்ச்சியில் மீனா அவருக்கு நன்றி கூறுகிறார். அதன் பிறகு, சிந்தாமணியிடம் வாழு வாழ விடு என்று கூறி, சவால் விட்டுவிட்டு மீனா வெளியேறுகிறார். பின்னர் சீதா என் அக்காவை அளிக்க நினைத்தால் இதுதான் நிலைமை, நானா இருந்தா இந்நேரத்துக்கு பேசிகிட்டு இருக்க மாட்டேன் என சொல்ல நீ என்...