இந்தியா, மார்ச் 11 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 11 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில், மீனா ஒரு பைனான்ஸ் நிறுவனம் சென்று, பூ அலங்கார பணிக்காக பணம் கேட்கிறார். பைனான்சியர் வீட்டிற்கு சென்ற மீனாவிடம் பைனான்சியர் எதற்காக பணம் தேவைப்படுகிறது என கேட்கிறார். அதற்கு நான் பூ வியாபாரம் செய்து வருகிறேன் டெக்ரேசன் பணியும் செய்து வருகிறேன். இப்பொழுது பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்திருக்கிறது அதை செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது என மீனா கேட்கிறார்.

அதேபோல இரண்டு நாட்களில் பணத்தை நான் திருப்பி தந்து விடுவேன் எனவும் மீனா சொல்கிறார். பின்னர் மீனா தனது குடும்பத்தை பற்றியும் பைனான்சியரிடம் கூறுகிறார். அப்போது பைனான்சியர் நீங்கள் கஷ்டப்பட்டு முன்னேற பாக்குறீங்க இப்படிப்பட்ட உங்களுக்கு கண்டிப்பா உதவி பண்ணலாம்...