இந்தியா, மார்ச் 1 -- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 1 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்று எபிசோட் தொடர்ச்சியாக இன்று சுருதி மீனாவிடம் அப்போ மனோஜ் ஒருவரை துரத்திக் கொண்டு ஓடும் போதுதான் இந்த விபத்து நடந்து இருக்கிறதா என கேட்கிறார். அதற்கு மீனா ஆமாம் சுருதி அத்தனை பேர் மேல இடிச்சிட்டு ஓடி போயிருக்காரு. கடைசியா வண்டி மேல போய் விழுந்து இருக்காரு. கண்ணுல அடிபட்டு இருக்கு பார்வை பாதிக்கிற மாதிரி ஏதாவது ஆகிவிடுமோ என மீனா கேட்கிறார்.

அதற்கு வாய்ப்பு இருக்கு ஆனா அப்படியே ஏதாவது ஆனாலும் டிரான்ஸ்பிளான்ட் பண்ணிக்கலாம் என சுருதி சொல்கிறார். அந்த அளவுக்கு எல்லாம் எதுவும் ஆகிட கூடாது. ரோகிணி தான் பாவம். அவங்க கண்ணையே குடுக்கறேன்னு சொல்றாங்க. அதற்கு சுருதி அவங்க மனோஜ் மேல இருக்க லவ்வுல அப்படி சொல்றாங்க. ஆனா கண்ண த...