இந்தியா, பிப்ரவரி 28 -- சிறகடிக்க ஆசை சீரியல் பிப்ரவரி 28 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோடு தொடர்ச்சியாக இன்று கடைக்கு வந்த ரோகிணி மாமாவை முத்து நில்லுங்க என சொல்கிறார். அருகில் சென்று நீங்கள் செல்போனை இங்கே விட்டுட்டு போறீங்க எடுத்துட்டு போங்க என சொல்லி ரோகிணி மாமாவிடம் கொடுக்கிறார். பின்னர் என்ன கடைக்குள் வண்டி ஓட்ட போறீங்களா? ஹெல்மெட் போட்டுட்டே இருக்கீங்க என முத்து கேட்கிறார். அதற்கு ரோகிணி மாமா தலையை மட்டும் அசைத்து விட்டு அங்கிருந்து செல்கிறார். என்ன போன் நான் எடுத்து கொடுத்ததற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் போகிறார். எதற்கு கடைக்குள் ஹெல்மெட் அணிந்து வந்திருக்கிறார் என ரோகிணியிடம் கேட்க அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் அவரிடம் கேளுங்கள் என ரோகிணி சொல்கிறார்.

அப்போது ரோகிணி அங்கிள் இங்...