இந்தியா, பிப்ரவரி 27 -- சிறகடிக்க ஆசை சீரியல் பிப்ரவரி 27 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்று விஜயாவும், மனோஜும் டயட்டீசியன் கொடுத்த உணவை சாப்பிட்டதால் வயிறு பிரச்சனை காரணமாக இரவில் தூங்காமல் டைனிங் ஹாலில் அமர்ந்து புலம்பி கொண்டிருந்தனர். அப்போது அண்ணாமலை மணி மூன்றரை ஆகிறது, இன்னுமா தூக்கம் வரவில்லையா என கேட்க அதற்கு மனோஜ் வயிறு சரியில்லை அப்பா அதனால் தான் தூக்கம் வரவில்லை என சொல்கிறார். அப்போது சத்தம் கேட்டு மீனாவும் முத்துவும் அங்கு வருகிறார்கள். அப்பா என்ன ஆச்சு உடல்நிலை சரியில்லையா தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறார். நான் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன்டா உங்க அம்மாவை காணோம் அதுதான் வந்து பார்த்தேன். இவங்க ரெண்டு பேருக்கும் வயிறு சரி இல்லையாம் எனசொல்கிறார்.

அந்த சமயத்தில் ரோ...