இந்தியா, பிப்ரவரி 26 -- சிறகடிக்க ஆசை சீரியல் பிப்ரவரி 26 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோடு தொடர்ச்சியாக இன்று மீனா நானும் என் வேலையில் நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் மருமகள் ஜெயிப்பால் என்று சொல்லுங்க அத்தை என்ன மீனா சொல்ல அதற்கு விஜயா முடியுமா என கேட்டதே நான் தான் என்னையே நீ இப்படி சொல்ல சொல்கிறாயா? என கேட்கிறார்.

அவங்க அந்த தொழில்ல கொடிகட்டி பறக்குறவங்க. நீ இப்பதானே வந்திருக்க உன்னால எப்படி முடியும்? அதற்கு மீனா ஏன் அத்தை என்னால் முடியாதா? என கேட்கிறார். அப்போது பார்வதி சரி சரி சண்டை எதற்கு? அவங்கவங்க வேலையை சரியா பார்த்தாலே எல்லோரும் முன்னேறலாம். போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. புலவர்கள் கூட போட்டி இருக்கலாம், ஆனால் சண்டை இருக்கக்க...