இந்தியா, பிப்ரவரி 25 -- சிறகடிக்க ஆசை சீரியல் பிப்ரவரி 25 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் மனோஜ் காலையிலேயே ரெடியாகி இருக்கிறார். இதை பார்த்து விஜயா என்னடா காலையிலேயே ரெடியா இருக்க என கேட்க அதற்கு மனோஜ் எல்லாம் உங்க விஷயம்தான் அம்மா. நான் தான் சொல்லியிருந்தேனே அம்மா டயட்டீசியன் ஒருத்தங்க அவங்க வந்துருக்காங்க என சொல்ல அப்படியா என விஜயா கேட்கும்போது டயட்டீசியன் வீட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

மனோஜ் விஜயாவுக்கு அம்மா நான் சொல்லியிருந்தேன் இல்ல டயட்டீசியன் தாரணி அது இவங்க தான் என அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னர் டயட்டீசியன் இடம் வீட்டில் உள்ள அனைவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார் மனோஜ். இவங்க தான் எங்க அம்மா இவங்களுக்கு தான் உடல் எடை குறைக்கணும் என தாரணியிடம் சொல்ல ஓ கண்டிப்பா இவங்களுக...