இந்தியா, பிப்ரவரி 22 -- சிறகடிக்க ஆசை சீரியல் பிப்ரவரி 22 எபிசோட் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம். இன்று போக்குவரத்து காவலர் அருண் ஒரு காய்கறி கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு வந்த முத்து காய்கறிக்காரரிடம் கீரை இருக்கிறதா அண்ணா என்று கேட்கிறார். அதற்கு கீரை கடைக்காரர் இல்லை காலி ஆகிவிட்டது என சொல்ல அதற்கு முத்து கீரை சாப்பிட்டால் உடம்புக்கு பலம் இருக்கும் என்று சொன்னார்கள் அப்படியா அண்ணா என்று கடைக்காரரிடம் கேட்க ஆமாம்பா எல்லா சத்தும் கீரையில் இருக்கிறது.

ஞாபகம் மறதி கூட இருக்காது. அப்போ கீரை சாப்பிட்டால் நடந்த விஷயம் எதுவும் மறக்காது, இனிமேல் எப்படி மறக்க முடியும் ஏன்னா செஞ்ச செய்கை அப்படி ஆச்சு என அருணை பார்த்து நக்கலாக முத்து சொல்கிறார். அப்போது ...