இந்தியா, ஏப்ரல் 1 -- சிறகடிக்க ஆசை சீரியல் ஏப்ரல் 01 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். சுருதியும் ரவியும் ரிசாட்டில் இருந்து வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது ரோகிணி கால் செய்து சுருதியை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார். ஆனால் சுருதி அதனை புரிந்து கொண்டு நான் இந்த விஷயத்தில் பார்வையாளராக இருக்க விரும்புகிறேன். எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்ன நடக்கப் போகிறது என்று என கூறி போனை கட் செய்கிறார். ரோகிணி எப்படியாவது சுருதியை தன் பக்கம் இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் சுருதி இப்படி சொல்லிவிட்டார் என புலம்புகிறார்.

பின்னர் அண்ணாமலை பாட்டியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வந்த பாட்டியை முத்துவும் மீனாவும் வரவேற்கிறார்கள். பின்னர் மனோஜ் ரூமில் இருந்து வெளியே வந்து பாட்டியை வரவேற்கிறார்....