விருதுநகர்,காரியாபட்டி,கழுகு வனச்சேரிழு, ஏப்ரல் 5 -- காரியாபட்டி வட்டம் கழுவனச்சேரி (கழுகு வனச்சேரி) கிராமத்தில், சாகுபடி நிலங்களை சிப்காட் அமைக்க எடுக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் கழுவனச்சேரி விவசாயிகள் கூட்டம், ஏப்ரல் 5 ம் தேதியான இன்று, அங்குள்ள மாடசாமி கோயிலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரா. ராம்பாண்டியன் தலைமையில் நடந்த கூட்டத்தில், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன், மாவட்ட துணைச் செயலாளர் த. கனகசபாபதி, மாவட்டக் குழு உறுப்பினர் தோப்பூர் தங்கம், கழுவனச்சேரி விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் செல்வக் குமார், பூமி, பிச்சை, வீரபாண்டி, முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கழுவனச்சேரி கிரா...