இந்தியா, ஏப்ரல் 29 -- சின்ன வெங்காயத்துல ரசம் வைக்க முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? அது வேண்டாம். அதில் ரசம் வைக்க முடியும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இந்த ரசத்தை சாப்பிடுவார்கள். இதை ஒருமுறை ருசித்தால் நீங்கள் அடிக்கடி செய்வீர்கள். செய்வதும் எளிது. இந்த சின்ன வெங்காய ரசத்தை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* கடலை பருப்பு - கால் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)

* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* புளிக்கரைசல் - ஒரு கப் (எலுமிச்சை அளவு புளியை எடுத்து சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்ட...