இந்தியா, மே 10 -- ஒரு படம் தயாரிக்கப்படுகிறது என்றாலோ அல்லது படத்தின் பூஜை அல்லது முதல் காட்சி எடுக்கப்படுகிறது என்றாலோ நம் எல்லாருக்கும் முதலில் நினைவு வருவது ஒரு கிளாப் போர்டு வைத்து அதில் படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனத்தின் எத்தனையாவது படம் என்பது குறித்த அறிவிப்பு குறிக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க| முந்தியடிக்கும் திரைத்துறை.. 'ஆபரேஷன் சிந்தூர்', 'மிஷன் பஹல்காம்' பெயருக்கு கூடும் மவுசு..

அத்தோடு நில்லாமல், படத்தின் தயாரிப்பாளரோ அல்லது முக்கிய பிரபலம் ஒருவரோ கிளாப் போர்டை காட்டி படத்தின் முதல் காட்சியை தொடங்கி வைப்பர். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே பாரம்பரியமாக செய்யப்பட்டு வரும் ஒரு விஷயம். படப்பிடிப்பிற்கும் இந்த கிளாப் போர்டிற்கும் என்ன சம்மந்தம் என்று என்றைக்காவது யோசித்து பார்த்ததுண்டா?

ரெட்ரோ படத்த...