இந்தியா, பிப்ரவரி 22 -- சிலர் குறட்டை பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். இதனால் இரவில் மற்றவர்களால் அவர்களின் அருகில் உறங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் இயற்கை முறையில் சில டிப்ஸ்களை பின்பற்றினால் குறட்டையில் இருந்து படிப்படியாக விடுபட வாய்புள்ளது என்று கோவை சித்த மருத்துவர் உஷா நந்தினி கூறியுள்ளார்.

இதுகுறித்து புதுயுகம் டிவிக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் குறட்டையில் இருந்து விடும் வழிகளை விளக்கியுள்ளார்.

உடலில் வழக்கம்போல் வாதம், பித்தம் மற்றும் கபம் சீராக இருந்தால் குறட்டை வராது. வாதம் அல்லது கபம் அதிகரிக்கும்போது அவர்களுக்கு குறட்டை பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்த மூன்று நாடிகளையும் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும் உணவு முறைகளை பழகவேண்டும்.

காலையில் தூதுவளைப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து அதை தேனில் குறைத்து சாப்பிடவே...