இந்தியா, மார்ச் 9 -- திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதன் மூலம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி வருகிறார். அதில் வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு அவர் எளிய சித்த மருத்துவ தீர்வை வழங்கியுள்ளார்.

ஒரு சிலருக்கு வாயில் புண், வயிற்றுப்புண், உணவுக்குழாயில் புண், இரைப்பை புண், குடல் புண் என அனைத்தை இடங்களிலும் சிலருக்கு புண் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் மருத்துவர்களிடம் எப்போதும் மருந்துகளை எழுதிக்கொடுக்கும்போது, இந்த மருந்துகள் புண்ணை ஏற்படுத்தாமல் இருக்குமாறு கொடுங்கள் என வலியுறுத்துவார்கள். அதிகம் பவரான மருந்துகள் வேண்டாம் என்று கூறுவார்கள்.

வயிற்றில் புண், வாயில் புண் ஏற்பட எண்ணற்ற காரணங்கள் உள்...