இந்தியா, மார்ச் 7 -- உங்கள் சருமத்தில் கரப்பான், தேமல், பூச்சிவெட்டு அல்லது கருமை நிறம் என எண்ணற்ற பிரச்னைகள் ஏற்படுகிறதா? அதற்கு நீங்கள் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும். சில மருந்துகளை வெளிப்புறத்தில் பூசவேண்டும். இதுகுறித்து திருச்சி இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராச ஈசன் நம்மிடம் வீட்டிலிருந்து செய்யக்கூடிய எளிய தீர்வுகள் குறித்து விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

எந்த வகை சரும நோய்களுக்கும், உள் மருந்து வெளி மருந்து இரண்டுமே எடுக்க வேண்டும்.

தினமும் காலையில் குப்பைமேனி சாறு 50 மில்லி அளவு எடுத்து வெறும் வயிற்றில் பருகி வரவேண்டும்.

மதிய உணவுக்கு முன் பிரண்டை சாதப்பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து ஒரு கவளம் அளவு சாப்பிட வேண்டும்.

இரவு உணவுக்கு பின் சதகுப்பை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு ட...