இந்தியா, மார்ச் 30 -- திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் எளிய சித்த மருத்துவ குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் தனது அண்மை வீடியோவில் குழந்தைகளுக்கு ஏற்படும் தீராத நீண்ட நாள் சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து எப்படி வெளியேறுவது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சித்த மருத்துவர் காமராஜ் கூறுயிருப்பதாவது

என்னிடம் வரும் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்கு சளி, இருமல் தொல்லை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது என்று வருந்துகிறார்கள். சளி, இருமல், மூச்சுத்திணறல், மூக்கு ஒழுகுதல் என தொல்லை தருகிறது. இதற்கு எண்ணற்ற குழந்தைகள் மருத்துவரை அணுகியும் பலனில்லை. மருந்துகள் சாப்பிட்டும் பயனில்லை என்று வருந்துவார்கள். எதற்கும் கட்டுப்படவில்...