இந்தியா, ஏப்ரல் 18 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

இவர் தனது அண்மை வீடியோவில் நரை முடியை தடுப்பது எப்படி என்று கூறியுள்ளார். இள நரை, முது நரை என அனைத்து வகை நரைகளுக்கும் அவர் தீர்வுகளைக் கூறியுள்ளார். அதற்கு உங்களுக்கு எளிதாக கிடைக்கும் இரண்டு பொருட்கள் மட்டும் போதும் என்று கூறியுள்ளார்.

பலருக்கு இளநரை தொல்லைகள், முதுநரை தொல்லைகள் என இரண்டும் இருக்கும். இதனால் அவர்கள் அவதிப்பட்டு வருவார்கள். தங்களின் தன்னம்பிக்கையே போய்விட்டது என்று வருந்துவார்கள். ஏனெனில் சிலருக்கு திருமணத்துக்கு முன்னரே 80 சதவீதம் அளவுக்கு முடி நரைத்துப் போயிருக்கும். இதற்காக உபயோக்கிக்கும்...