இந்தியா, மார்ச் 3 -- திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் சமூக வலைதளங்கள் வாயிலாக எண்ணற்ற சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். இதன் மூலம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அவர் இன்று சர்க்கரை நோய் எற்படுத்தும் புண்களில் இருந்து விடுபடும் வழிகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர் அந்த புண்ணுக்கு நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய தைலம் குறித்த எளிய தயாரிப்பு முறையை விளக்கியுள்ளார்.

நாள்பட்ட புண்கள் சிலருக்கு இருக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் உடனடியாக ஏற்பட்டுவிடும். நகங்களை வெட்டினாலோ அல்லது லேசாக அடிபட்டாலோ அல்லது நகம் கடித்தாலோ புண்கள் உடனடியாக ஏற்பட்டு, சலம் வைத்து, செப்டிக் ஆகி, காய்ச்சல் வரும் அளவுக்கு இன்ஃபெக்சன் ஆகிவிடும். சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, அழுகும் அளவுக்கு வாய்ப்பு உ...