இந்தியா, மார்ச் 17 -- உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க செய்வது எப்படி என்று மருத்துவர் ஜெயரூபா கூறுகிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டு விவரங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

டாக்டர் ஜெயரூபா ஒரு சித்த மருத்துவர். இவர் பெண்கள் உடல்நலன் குறித்து ஸ்பெஷலைசேஷன் செய்துள்ளார். இவர் சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக்குறிப்புக்களை வழங்கி, சித்த மருத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க நீங்கள் செய்யவேண்டிய எளிய விஷயம் என்னவென்று அவர் கூறிய விவரங்ககீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச் செய்யவேண்டுமெனில் நீங்கள் அதிகாலையில் துயில் எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும்போது, 8 மணியளவில...