இந்தியா, ஏப்ரல் 5 -- Tamil New Year 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.

இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். அந்த வகையில் சூரிய பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினமே தமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை மாதம் பிறக்கின்றது. அதுவே தமிழ் புத்தாண்டு திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் விசுவாவசு தமிழ் ப...