இந்தியா, பிப்ரவரி 26 -- நமது வீடுகளில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் மாலை நேரம் வந்துவிட்டாலே சுட சுட டீயுடன் சூடான சிற்றுண்டி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் சில சமயங்களில் நம்மால் சிற்றுண்டிகளை செய்ய முடியாத நேரத்தில் கடைகளில் சென்று வாங்கித் தருகிறோம். அந்த சிற்றுண்டிகளையும் விருப்பத்துடன் சாப்பிடுகிறார்கள். கடைகளில் இருந்து வாங்கப்படும் சிற்றுண்டியில் முதன்மையான இடத்தில் இருப்பது சமோசா தான். சமோசா காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு பிரதான சிற்றுண்டியாக தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. சமோசாக்களில் வெங்காய சமோசா, உருளைக்கிழங்கு சமோசா என பல வகைகளை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் சமோசாவை சிக்கனை வைத்து செய்ய முடியும். சிக்கன் வைத்து செய்வதால் இது மிகவும் அதிக சுவையுடன் இருக்கும். இதனை செய்வதும் மிகவும் ...