இந்தியா, ஏப்ரல் 17 -- அன்றாடம் நாம் உண்ணும் உணவில் அதிகமாக உப்பை சேர்த்தால் பல உடல்நலப் பிரச்னைகளை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உணவில் உப்பு சேர்க்காமல் இருந்தால் சுவை குறைவாக இருக்கும். ஆனால், சில உணவுகளில் உப்பு சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல. அது விஷம் போல செயல்படுமாம். எந்தெந்த உணவுகளில் உப்பு சேர்க்கக் கூடாது என்பதை இங்கே காணலாம்.

பலர் சாலடில் உப்பு சேர்த்து சாப்பிடுகிறார்கள். பச்சை உப்பை சாலட் மீது தூவி சாப்பிடுவது சாலட்டை ஆரோக்கியமற்றதாக்கும். பச்சை சாலட் மீது உப்பு தூவி சாப்பிடுவதால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும். மேலும், இது உடலில் நீர் தேங்குவதற்கு வழிவகுக்கும். சிறுநீரக பிரச்னைகளுக்கும் இது காரணமாகலாம். சாலட் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை அளிக்கிறது. நார்ச்சத்தையும் அளிக்கிறது. எனவே, ஆரோக்கியமான சாலட்டில் உப்பு சேர்க்காமல் இருப்ப...