இந்தியா, மார்ச் 23 -- பொதுவாகவே சாம்பார், ரசம், வத்தல் குழம்பு என எந்த ஒரு ரெசிபிக்கும் நாம் மசாலாக்களை தயார் செய்து வைத்துக்கொண்டோம் என்றால் மிகவும் நல்லது. ஏனெனில், அப்போதுதான் சமையல் எளிதாக முடியும். சமைக்கும்போது சிரமும் தெரியாது. அந்தந்த மசாலாக்களை சேர்த்து நாம் சமையலை விரைவாக முடித்த விடலாம். இங்கு ஐயங்கார் வீட்டு சாம்பொடி ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இது தனிச் சுவை கொண்டதாக இருக்கும். இதை சாம்பார் மட்டுமின்றி வேறு சில காய்கறிகளை வறுக்கவும் பயன்படுத்தலாம் என்பதால் இது பல்வேறு உபயோகத்துக்கும் பயன்படும் பொடியாகிறது. இந்த ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி செய்வது எப்படி என்று பாருங்கள்.

* வரமல்லி - அரை கிலோ

* குண்டு மிளகாய் - கால் கிலோ

* துவரம் பருப்பு - கால் கிலோ

* கடலைப் பருப்பு - 100 கிராம்

* மிளகு - 50 கிராம்

* வெந்தயம் - 20 கிராம...