இந்தியா, மே 7 -- சாதிவாரு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும் என்பதற்காக கால அட்டவணையை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், "இந்திய மக்களுக்கு முழுமையான சமூகநீதியை வழங்கும் வகையில், நாடு முழுவதும் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த தங்கள் தலைமையிலான அரசு ஆணையிட்டிருப்பது தான் இதற்கு காரணம். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கப் பட்டதன் நோக்கங்களில் முதன்மையானது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவத...