இந்தியா, ஏப்ரல் 30 -- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமில்லாமல், சாதிவாரி ஆய்வையும் நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்-தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது! இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது.

மேலும் படிக்க:- வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அட்சயதிருதி நாளில் செய்ய ...