இந்தியா, பிப்ரவரி 28 -- நமது வீடுகளில் காலை நேரம் என்பது மிகவும் பரபரப்பான நேரமாக இருக்கிறது. ஏனென்றால் அந்த நேரத்தில் தான் அலுவலகங்களுக்கும், பள்ளிக்கு செல்பவர்களும் அவசர அவசரமாக புறப்பட்டு கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் சமையல் என்பது மிகவும் பெரும் பாடாக இருக்கும். ஏனெனில் காலை மற்றும் மதியம் என இரு வேலைகளுக்கும் தேவையான உணவுகளை சமையல் செய்பவர்கள் செய்ய வேண்டும். இது பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் சற்று கடினமானதாகவே இருக்கும். மேலும் சில சமயம் தாமதமாக எழுந்து இருந்தாலும், அல்லது பணி செய்ய முடியவில்லை என்றாலும் காலை மற்றும் மதிய நேர உணவுகளுக்கு சமைப்பது மிகவும் கடினமான காரியம்.

இப்பொழுது அதனை எளிதாக்குவதற்கு சில பொடிகளை நாம் வீட்டிலேயே செய்து வைத்தால் நன்றாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கும், மேலும் சூடான சாதத்திலும் கலந்து சாப்...