இந்தியா, ஏப்ரல் 19 -- சாட்டை துரைமுருகனின் பேச்சால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கவே சாட்டை வலையொளிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிக்கை வெளியிட்டதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழர்களுக்கு தனித்தன்மை இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். "தமிழகத்துக்கு என்ன தனித்தன்மை இருக்கிறது? ஊழல் மற்றும் லஞ்சத்தில் முதலிடத்தில் இருப்பது தனித்தன்மையா? கோயில்களில் எல்லோரும் ஒன்றாக வழிபட முடியாதது தனித்தன்மையா?" என்று வினவினார். மாநில உரிமைகளைப் பறித்தெடுத்ததாக காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை விமர்சித்த அவர், இந்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தவர்கள் மாநில தன்னாட்சி பேசுவது முரண்பாடு எனக் குறிப்...