இந்தியா, ஏப்ரல் 1 -- தமிழக சட்டப்பேரவை மூன்று நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது. இன்றைய கூட்டத்தொடரில், பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது; நாளாகிவிட்டது என்பதால் இப்போது அதை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறி நிராகரித்துள்ளார்.

முன்னதாக, தன் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம்சாட...