இந்தியா, பிப்ரவரி 24 -- சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகள் உள்ளிட்டவற்றை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துகளை கூறக்கூடாது என்ற முந்தைய நீதிமன்ற வழிக்காட்டுதலை பின்பற்றுமாறு சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கரின் நேர்காணல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 16 முதல் தகவல் அறிக்கைகளுக்கு எதிரான வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற அவமதிப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2022ஆம் ஆண்டு பிறப்பித்...