இந்தியா, மார்ச் 8 -- 'பாலியல் சமத்துவம் குறித்து ஆண்களுக்கும் சிறுவயது முதல் கற்பிக்க வேண்டும்' என வழக்கறிஞர் செல்வ கோமதி தெரிவித்து உள்ளார்.

இந்திய தென்மண்டல அஞ்சல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. சங்கத்தின் மகளிர் பிரிவு செயலர் ஆர்.பானுமதி தலைமை தாங்கினார். பாண்டீஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கன்வீனர் ஆர். வெங்கடேஸ்வரி தனது துவக்க உரையில் கருத்தரங்கின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

மதுரையில் இந்திய தென்மண்டல அஞ்சல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கு

வழக்கறிஞரும் பெண்ணியவாதியுமான செல்வ கோமதி சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் "பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறைய பெண்கள் மீதான தவறான கற்பிதங்களை உடைப்பதற்கு ...