இந்தியா, மார்ச் 18 -- பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பிதான் நடிகர் பாலா. காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, அன்பு, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் பாலா, மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நேற்றைய தினம் கொச்சின் காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னுடைய முன்னாள் மனைவிகள் மீது புகார் ஒன்றை கொடுத்தார். அந்தப்புகாரில், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அவர்கள் செயல்படுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடிகர் பாலா சந்தித்த சர்ச்சைகளை பார்க்கலாம்.

நடிகர் பாலா முதலில் சந்தன சதாசிவ என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவருடனான திருமண வாழ்வை அவர் முடித்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

மேல...