இந்தியா, ஏப்ரல் 17 -- சர்க்கரை நோயாளிகள் பலர் சாதம் சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல என்று நினைக்கிறார்கள். அதேநேரம் சாதம் சாப்பிடும் பழக்கத்தை விடுவதற்கு பல முயற்சிகள் செய்கிறார்கள். நிபுணர்களின் கருத்துப்படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எடை குறைக்க விரும்புபவர்கள் சாதம் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது அல்ல. ஆனால், சமைக்கும் முறை சரியாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, சாதம் சமைக்கும் போது சிலவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நம்பப்படுகிறது.

பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி அல்லது வெள்ளை அரிசி என எந்த வகை அரிசியாக இருந்தாலும் இந்த ஆயுர்வேத முறையில் சமைத்து சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது. இவ்வாறு சமைத்தால் சாதம் எளிதில் செரிமானமாகும். இப்போது சாதம் சமைப்பதற்கான ஆயுர்வேத சரியான முறை ...