இந்தியா, ஏப்ரல் 17 -- தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்து வரும் விஜய் தற்போது அவரது இறுதி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் ஜனநாயகன் படத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தவெக தலைவர் விஜய் அதிரடி.. வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான சச்சின் படம் தற்போது மீண்டும் வெளியாகவுள்ளது. படம் ரிலீஸ் ஆன சமயத்தில் தோல்விபடமாக அமைந்த இப்படம் காலங்கள் செல்ல செல்ல கிளாசிக் படமாக மாறியது.

அதன் பலன், பலரின் ஃபேவரைட் படமாக மாறியது. இந்தப்படத்தில் விஜயின் நடிப்பு அனைவரும் ரசி...