இந்தியா, பிப்ரவரி 24 -- நாம் வீடுகளில் செய்யும் சமையலை விட நமது வீட்டில் உள்ளவர்களுக்கு ஹோட்டலில் செய்யும் உணவு தான் மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. ஏனெனில் அங்கு சேர்க்கப்படும் வித்தியாசமான கலவைகள் உணவின் சுவையை அதிகரிக்கிறது. சில சமயங்களில் வீட்டு உணவு சலித்து போகிவிட்டால் ஹோட்டல்களை நாடுவது வழக்கமாகிவிட்டது. மேலும் வெளியூரில் சென்று வேலை பார்ப்பவர்களும் ஹோட்டலையே பிரதானமாக நம்பி வருகின்றனர். காலை, மதியம், இரவு என மூன்று வேலை உணவுகளுக்கும் ஹோட்டலையே நம்பி வாழ்ந்து வருபவர்கள் பலர் உள்ளனர். ஏனெனில் வேலைக்கு செல்வதால் அவர்களால் வீட்டில் சமைக்க முடியாது அப்படி சென்னை போன்ற பெரிய நகரங்களில் பிரபலமான ஒரு உணவகமாக சரவணபவன் இருந்து வருகிறது. சைவ உணவுகளுக்கு பெயர் போன இந்த உணவகத்தில் அனைத்து உணவுகளும் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இரு...