இந்தியா, மார்ச் 1 -- சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க சென்ற நீலாங்கரை காவல் ஆய்வாளர் ராஜேஷ், சீமான் வீட்டின் பாதுகாவலரும், முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரருமான அமல்ராஜை தாக்கி கைது செய்யும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவரையும் பிரவீன் ராஜேஷ் மிரட்டல் தொனியில் ஒருமையில் பேசி இருந்தார்.

மேலும் சீமான் வீட்டு பாதுகாவலர் தாக்கியதில் உடலில் காயம் ஏற்பட்டதாக கூறி ராயப்பேட்டை மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக்...