இந்தியா, மார்ச் 13 -- பொதுவாக வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பூசணிக்காய் அல்லது வடை போன்றவற்றை வைத்துதான் மோர் குழம்பு செய்வார்கள். ஆனால் அந்த மோர் குழம்பை நீங்கள் கொண்டைக்கடலையில் கூட வைத்து செய்யமுடியும். அதை செய்வது எப்படி என்று பாருங்கள். பொதுவாக குழந்தைகள் மோர் குழம்பு போன்ற குழம்பு வகைகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களும் இந்த கொண்டைக்கடலை மோர் குழம்பை சாப்பிடுவார்கள். ஏனெனில் குழந்தைகளுக்கு மிகவும் கொண்டைக்கடலை பிடிக்கும்.

* கொண்டைக்கடலை - ஒரு கப்

(8 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்தது)

* தயிர் - ஒரு கப் (அடித்து வைத்துக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2

* மஞ்சள் தூள் - கால...