இந்தியா, ஏப்ரல் 25 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நல்ல கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதேபோல ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது சனி பகவான் கடந்த மார்ச் 29ஆம் தேதியிலிருந்து மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர் மகரம் ...