இந்தியா, ஏப்ரல் 7 -- சனி பெயர்ச்சி : ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ற கர்ம வினைகளை கொடுப்பவர், சனி பகவான். மிக மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியை இரண்டரை ஆண்டுகள் விட்டுவிட்டு மார்ச் 25, 2025 அன்று மீன ராசிக்குள் நுழைந்தார்.

இந்த மாற்றத்தினால் சில ராசிகளுக்கு நல்ல பலனும் , சில ராசிகளுக்கு அசுப பலனும் கிடைக்கும். இதனிடையே பூர்வ பாத்ரபத நட்சத்திரத்தில் இருக்கும் சனி பகவான் ஏப்ரல் 28 ஆம் தேதி காலை 7. 52 மணிக்கு பிறகு உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இதனால் சில ராசிக்காரர்கள் இதில் பெரிதும் பயனடைவார்கள். எந்தெந்த ராசிகள் சனி பகவானால் நன்மை அடைவார்கள் என்று கீழே பார்க்கலாம்..

உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்ல பலன்கள் க...