இந்தியா, ஜூன் 12 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் சனி பகவான் நீதிமானாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவான் பார்வை கூட அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் சனி பகவானின் மூன்றாம் பார்வையானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் சனி பகவானின் மூன்றாம் பார்வையானது மே 15 ஆம் தேதியான அன்று முதல் சூரியன் மீது விழந்து வருகிறது. சூரிய பகவான் கடந்த மே 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கின்றார்.

சூரிய பகவான் ரிஷப ராசியில் இருக்கும் பொழுது சனி பகவானின் மூன்றாம் பார்வையானது சூரியன் மீது விழுகின்றது. சனிபகவானின் மூன்றாம் பார்வை சூரியன் மீது விழுகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இரு...