இந்தியா, ஜூன் 26 -- வேத ஜோதிடத்தில், நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப சுப, அசுப பலன்களைத் தருபவராகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப்போகிறார். அதாவது பின்னோக்கி நகரப்போகிறார்.

சனி பின்னோக்கிச் செல்லும் காலம் ஜூலை 13, காலை 7:24 மணிக்கு மீன ராசியில் தொடங்குகிறது. பின்னர் நவம்பர் 28, காலை 7:26 மணிக்கு நேராகச் செல்லத் தொடங்குகிறார். அதாவது சுமார் 139 நாட்கள் பின்னோக்கிச் செல்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் ஆசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சனியின் நகர்வால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம...