இந்தியா, மே 10 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர்.

சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.

சனிபகவான் ஒரு ராசி இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் தற்போது சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்...