இந்தியா, மார்ச் 28 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதி மலராக விளங்க கூடியவர் சனி பகவான். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு செல்கின்றார். வரும் 2027 ஆம் ஆண்டு வரை சனிபகவான் மீனராசியில் பயணம் செய்வார்.

இந்த ஆண்டு நிகழ உள்ள சனி பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் சனி பகவான் இடம் மாறும் நாளில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பெயர்ச்சி, சூரிய கிரகணம், சனி அமாவாசை என அனைத்து சிறப்பு நிகழ்வுகளும் நிகழ உள்ளன.

இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் அன்று தான் நிகழ உள்ளது. அந்த வகையில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி அமாவாசை திருநாள...