இந்தியா, மார்ச் 4 -- Sani Peyarchi: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு இடம் மாறுகிறார். சனிபகவான் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் இந்த முறை மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகின்றது.

சனிப்பெயர்ச்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மக்கள் இந்த ஆண்டு சனி பகவானின் இடமாற்றத்தை காணப் போகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசிக்கு செல்கின்றார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சனி பகவான். அதன் காரணமாக வரும் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இதே மீன ராசியில் பயணம் செய்வார்.

நவகிரகங்களில் அதிக காலம் ஒரு ராசியில் பயணம் செய்யக்கூடியவர் சனி பகவான். தர்ம நாயகனாக அழைக்கப்படக்கூடியவர் ச...