இந்தியா, மார்ச் 5 -- Shani Peyarchi: நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரண்டுக்காக தெரிவித்துக் கொடுப்பார்.

நவகிரகங்களில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளும் கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். அதன் காரணமாக இவர் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். நீதிமானாக சனிபகவான் விளங்குகின்ற காரணத்தினால் இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மார்ச் மாதம் மீன ராசிகள் நுழைகின்றார். அஸ்தமன நிலையில் மீன ராசியில் நுழையும் சனிபகவான் வரு...