இந்தியா, மார்ச் 18 -- வேத ஜோதிடத்தில், நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். ஒருவரது செயல்களுக்கு ஏற்ப சுப, அசுப பலன்களைத் தருபவராகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணித்துக்கொண்டிருக்கிறார். இத்தகைய சூழலில், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது ராசியை மாற்ற உள்ளார். அதாவது வரும் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிக்கு செல்கிறார். சனி பகவான் மீன ராசிக்கு செல்லும் நாளன்று தான் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

சூரிய கிரகணமும், சனியின் பெயர்ச்சியும் ஒரே நாளில் நிகழவுள்ளதால் இந்த நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் இப்படியான நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த அரிய நிகழ்வு சில ராசிக்கார...