இந்தியா, மார்ச் 29 -- 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (மார்ச் 29) பிற்பகல் 2.21 மணிக்கு தொடங்கி மாலை 6.14 மணி வரை நிகழ உள்ளது. இதேநாளில் மீன ராசியில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் போது 5 கிரகங்கள் மீன ராசியில் கூடுகின்றன. மேலும், சூரியன், சனி ஆகியவை மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு ஒரே வருடத்தில் இரண்டு முறை சந்திக்கின்றன. முதல் சந்திப்பு பிப்ரவரி 12 அன்று கும்ப ராசியிலும், இரண்டாவது சந்திப்பு மார்ச் 29 அன்று மீன ராசியிலும் நிகழ்கிறது.

சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்களின் வாழ்வில் சவால்கள், பிரச்னைகள் ஏற்படும். சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், குடும்ப வாழ்வில் பதற்றம் இருக்கலாம். இந்த நேரத்தில் இந்த ராசிகள் க...